உளறல்

Updates from ரவி RSS

  • 01:36:12 pm on November 19, 2008 | 2 | # |
    Tags: , , ,

    அம்மா சொன்ன பழமொழி: தூக்கி விட்ட நாய் முச பிடிக்காது.

    உரை: வேட்டை நாய் அதுவாவே ஓடி முயலைப் பிடிச்சிடும். வீட்டு நாய என்ன தான நாம தூக்கி தூக்கி விட்டு உசுப்பி விட்டாலும் அதால முயலைப் பிடிக்க முடியாது. அது போல் வாழ்க்கையில் வேண்டுவதைப் பெற தன்முனைப்பு தேவை ! அதில்லாம அடுத்தவங்க தூண்டி விட்டு பயன் இல்லை

     
  • 01:31:23 pm on November 19, 2008 | 2 | # |
    Tags:

    ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காத கதை! இப்போ இந்தத் தளம் WordPress 2.7 Beta 3ல் இயங்குது :)

     
  • 01:10:04 pm on November 19, 2008 | 0 | # |
    Tags: , ,

    பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? நூல் படித்தேன். நூலில் சொல்லி இருப்பதெல்லாம் ஒரு விசயமா என்று நினைக்கும் போது தான், நம் சமூகம் எவ்வளவு முன்னோக்கி வந்திருக்கிறது என்பது உறைக்கிறது. 10 கட்டுரைகளையும் 10 டுவிட்டில் சொல்லி இருக்கலாம். நல்ல சிந்தனையாளர்கள் திறமையான எழுத்தாளர்களாவும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

     
  • 01:07:17 pm on November 19, 2008 | 0 | # |
    Tags: ,

    ரிச்சர்டு சிட்டால்மேன் எழுதி ம. சிறீ. ராமதாசு மொழிபெயர்த்த கட்டற்ற மென்பொருள் என்ற ஆழி பதிப்பக வெளியீடு படித்தேன். முக்கியமான உலக இயக்கத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் பாராட்ட வேண்டிய முயற்சி. எழுத்து நடை தான் படிக்க அயர்ச்சியாக இருந்தது :(

     
  • 01:04:43 pm on November 19, 2008 | 0 | # |
    Tags: , , ,

    சீனி கம், சிவா 2006 இந்திப் படப் பாடல்கள் தேனா இனிக்குது. இப்படி இளையராசாவே தன்னுடைய சிறந்த பாடல்களை மீள இசைத்துத் தந்தா நல்லா இருக்கும்.

     
  • 07:19:30 am on November 17, 2008 | 1 | # |
    Tags: ,

    வாரணம் ஆயிரம் பார்த்தேன். பாடல்கள் மட்டும் பார்க்கலாம். அழுத்தமற்ற கதை, திரைக்கதை, காட்சிகள், பாத்திரப் படைப்புகள். இரண்டாம் பாதி வீண்.

     
  • 11:14:34 pm on November 15, 2008 | 0 | # |
    Tags: ,

    அலிபாபா பார்த்தேன். அண்மையில் வந்த தமிழ்த் திரைப்படங்களில் கடைசி வரை நல்ல திருப்பங்கள் கூடிய கதை. தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

     
  • 12:48:29 pm on November 15, 2008 | 0 | # |
    Tags: , , ,

    பலரும் நேரில் பார்ப்பதை விட புகைப்படங்களில் நன்றாக இருக்கிறார்கள். நம் எல்லோருக்கும் வெளியே நல்ல முகத்தைக் காட்டத் தான் பிடிக்கிறதோ :)

     
  • 12:44:48 pm on November 15, 2008 | 1 | # |
    Tags: , , ,

    பெரிய முதலாளிகள் விற்கும் நகை, செல்பேசிகள் முதலியவற்றை அவர்கள் சொல்லும் விலைக்கு வாய் பொத்தி வாங்கிக் கொள்கிறோம். காய்கறி விற்பவர், மீன் விற்பவர், தானி ஓட்டுபவர் என்று அடித்தட்டு மக்களிடம் மட்டும் ஏன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம்?

     
  • 09:35:49 pm on November 13, 2008 | 0 | # |
    Tags: , , , , ,

    “சட்டக்கல்லூரிச் சண்டையில் அடித்த மாணவர்கள் தலித்கள். படிப்பு வராத காட்டான்களை எல்லாம் இட ஒதுக்கீடு மூலம் கல்லூரிக்கு வந்ததால் வந்த வினை” என்று எழுதி ஊடக நுண்ணரசியல் விளையாடுகிறது. அடிபட்ட ஆதிக்கச் சாதி மாணவன் உருட்டுக்கட்டைகளை விட வலிமையான கத்தியை எடுத்துக் கொண்டு பாய்ந்தான் என்பதை விட்டு விட்டார்கள்.

    இந்தச் சண்டை என்பது ஒரு நாள் கோபம் இல்லை. இந்தக் கல்லூரியிலும் காலம் காலமாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் எத்தனை முறை உடலாலும் உள்ளத்தாலும் அடிவாங்கி இருப்பார்கள், கொல்லப்பட்டிருப்பார்கள்?

     
  • 08:49:54 pm on November 13, 2008 | 0 | # |
    Tags: , ,

    பெரும்பாலும் தலித்துகளுக்கும் சாதி இந்துகளுக்கும் மோதல் என்றே செய்திகள் வருகின்றனவே? ஏன் எந்த ஆதிக்கச் சாதி என்று ஊடகங்கள் பெயர் குறிப்பிடுவதில்லை?

     
  • 08:46:44 pm on November 13, 2008 | 0 | # |
    Tags: ,

    Quantum of solace பார்த்தேன். பாண்டு அண்ணா, கொஞ்சம் சிரிங்கண்ணா :(

     
  • 10:50:56 pm on November 11, 2008 | 0 | # |
    Tags: , ,

    புதிய தமிழ்த் திரை இசை பாடகர்களில் பென்னி தயால் ஈர்க்கிறார். பாடலுக்கு பாடல் அருமையான வேறுபாடுகள் காட்டுகிறார்.

     
  • 03:36:31 pm on November 11, 2008 | 0 | # |
    Tags: , , ,

    ஆனந்த தாண்டவம் பாடல்கள் கேட்டேன். ஏற்கனவே கேட்ட உணர்வு. G. V. Prakash kumar வார்ப்புருக்காரர் ஆகிறார். இனி இவரிடம் எதிர்ப்பார்க்காமல் இருப்பது நலம்.

     
  • 08:44:52 pm on November 7, 2008 | 2 | # |
    Tags: , ,

    அய்யனார் முதல் கருப்பசாமி வரை எல்லா தமிழ்நாட்டுக் கடவுள்கள் பெயருக்கு முன்னும், குறைந்தது 30% கடைப்பெயர்களின் முன்னும் சிறீ காண இயல்கிறது. 5, 10 ஆண்டுகள் முன்பு இப்படி இருந்ததா தெரியவில்லை. திடீர் மாற்றம் எப்படி வந்தது?

     
Next Page »